search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டிகள்"

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மதுரையில் தொடங்கியது.
    • ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

    முதல்நாளான இன்று காலை 12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.

    திருப்பாலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 1,2-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கிரிக்கெட் போட்டி, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் 2,3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

    கபடி, சிலம்பம், கூடைப் பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து ஆகிய போட்டிகள் 4,5-ந் தேதி களிலும், கால்பந்து 5,6-ந் தேதிகளிலும், தடகளம் 7-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை 6,7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான தடகளப்போட்டி 6-ம் தேதியும், இறகுப்பந்து, கபடி எறிபந்து, கைப்பந்து ஆகியவை 7-ம் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அரசு ஊழியர் களுக்கான கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் போட்டிகள் 8,9-ந் தேதிகளிலும், தடகளம் 11-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் 11,12-ந் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அதே தேதிகளில் திருப்பாலை பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி களில் ஆன்லைன் பதிவு பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி விளை யாட்டு வீரர் வீராங்கனை கள் இன்று காலை முதலே ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை மாவட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பெற்றவருக்கு, ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    மதுரை மாவட்ட விளை யாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் அரசு சார்பில் பங்கேற்பார்கள்.

    • தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.
    • கபடி, பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    சென்னை:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் (2022-23) இன்று தொடங்கியது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம், தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கபடி, பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டலக் குழு தலைவர் மதன்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு நகர பகுதிகளான நந்தவனத் தெரு, பாவடி தெரு, நெசவாளர் காலனி சட்டையம்புதூர், சூரியம்பாளையம் கூட்டப்பள்ளி, நாமக்கல் ரோடு எட்டிமடைப்புதூர் அம்பேத்கர் நகர், பக்தவச்சலம் நகர், கீழேரிப்பட்டி, கொல்லப்பட்டி என பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர். சூரியம்பாளையம் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் கபடி போட்டிகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டது.

    சட்டையம்புதூர் பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் வெகுவாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது . பாவடித்தெருவில் திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல் போட்டிகள் நடத்தியதில் மாணவர்கள் ஆர்வமுடன்

    பங்கேற்றனர்.

    தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இப் போட்டிகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    விளையாட்டு போட்டி

    கூட்டத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேசியதாவது;

    44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு களுக்காக மாநிலம், மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தாா்.

    அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    42 போட்டிகள் மாவட்ட அளவிலும், 8 போட்டிகள் மண்டல அளவிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இந்த 50 போட்டிகளுக்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.

    பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத்தின் அணி உருவாக்கப்படும்.

    மாவட்ட அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும். மாநில போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்ட அணிக்கும் தனியாக சீருடை, பயணச் செலவு, தங்குமிடம், உணவு ஆகியன வழங்கப்படும்.

    மாநிலப் போட்டிகளின் நிறைவு விழா முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும்.முதல் 3 இடங்கள் பெரும் மாவட்டங்களுக்கு முதல்அமைச்சா் கோப்பை வழங்கப்படும்.

    விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் நொய்லின்ஜான், கல்லூரி கல்வி இணை இயக்குநா் காவேரியம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
    • இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்–திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பலவிதமான விளை–யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி–யில் கலந்து கொண்ட மாண–வர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி, புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், நாமகிரிப்–பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பா சிரியர்கள் அருள் ராஜா, சரவணன் மற்றும் இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா மற்றும் பகுதிநேர ஆயத்த மையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வார விழா கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அறையில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், உறுப்பினர் கல்வித் திட்டம், இளைஞர் ஈர்ப்பு முகாம், கூட்டுறவு தயாரிப்புகள் விற்பனை மேளா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவது என்றும் வனத்துறை அமைச்சர் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு சரக துணைப்பதிவாளர் மது, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முத்து சிதம்பரம், ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வரும் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை ஊட்டியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்க பணியாளர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கூட்டுறவு வார விழாக்குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
    • உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

    இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 சரகங்களில் வெற்றி பெற்ற அணிகள் மட்டும் பங்கேற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள்.

    இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். தொழில் நுட்பத் தலைவராக உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

    உடற்கல்வி ஆய்வாளர் சைமன் ஜார்ஜ் கால்பந்து, உடற்கல்வி இயக்குனர் திவ்யலட்சுமி கைப்பந்து, உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் சிவபிரகாஷ் ஆகியோர் கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவர்க ளாக செயல்பட்டனர். 108 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் இயக்குனரின் உத்தரவின்படி வட்டார அளவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி டாக்டர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளை கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் 100, 200 மீட்டர் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இறகு பந்து, சதுரங்கம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலம், பாட்டு, நடன போட்டிகள் புயல் நிவாரண கூட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள்

    பெரம்பலூர்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அந்த துறையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோ-கோ, கிரிக்கெட், கபடி, பூப்பந்து. எறிப்பந்து, ஹேண்ட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கோலப்போட்டி, சிறு சிறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அந்தந்த வட்டார மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பரிசளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது."

    • கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது.
    • தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார்.

    கோவை,

    தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 பேர் பங்கேற்கின்றனர். வரும் 23-ந் தேதி வரை தொடர்ந்து இப்போட்டிகள் நடக்கிறது. முதல் 2 நாட்கள் துறை சார்பில் செயல்விளக்கம் மற்றும் திறன் போட்டி நடக்கிறது. இறுதிநாள், தடகளப்போட்டி நடக்கிறது.

    போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தனி நபர் வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் பரிசு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மண்டலத்தில் இப்போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்போட்டி நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போட்டி கோவையில் நடப்பதால், தீயணைப்பு படை வீரர் களுக்கு இடையே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. பரிசளிப்பு விழா வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. பிராஜ் கிஷோர் ரவி பரிசு வழங்குகிறார்.

    விழாவில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர். 

    • கோ-கோ, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.
    • சரக அளவிலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரக அளவிலான மகளிருக்கான விளையாட்டு போட்டிகளை மாரண்ட அள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். கைப்பந்து, கோ-கோ, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.

    சரக அளவிலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் முதன்மை நடுவர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் , மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார்

    புதுக்கோட்டை :

    கந்தர்வகோட்டை அருகே மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.

    விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் மாலா, பள்ளி ஆசிரியர்கள் வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மா பாய், ராதா, இலக்கியா, குணசேகரன், ஓவியா பூபதி ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ×